கண்டியில் பழைய சிறைச்சாலைக்கு அருகே இன்று (29) காலை நடைபாதையின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்ததால் ஏற்பட்ட குழிக்குள்விழுந்த நால்வர் காயமடைந்து கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்த மூன்று ஆண்கள் மற்றும் ஒரு பெண் ஆகியோர் நடைபாதையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, நடைபாதையின் ஒரு பகுதி திடீரென, பூமிக்குள் சென்றுள்ளது.
வணிகக் கடைகளுக்குப் பின்னால் செல்லும் கால்வாயில் பாயும் நீரினால் ஏற்பட்ட கடுமையான மண் அரிப்பு காரணமாக, நடைபாதைக்கு அடியில் இருந்த நிலப்பகுதி பலவீனமடைந்திருக்கலாம் என உள்ளூர்வாசிகள் சந்தேகிக்கின்றனர்.










