சாமிமலை பகுதியில் வீடுகளை இழந்த 4 குடும்பங்களுக்கு புதிய வீடுகள் அமைக்கும் பணி ஆரம்பம்

அனர்த்தத்தால் வீடுகளை இழந்த மஸ்கெலியா, சாமிமலை, பெயார்லோன் தோட்டத்தைச் சேர்ந்த நான்கு குடும்பங்களுக்கு புதிய வீடுகளை நிர்மாணிக்க அடிக்கல் நாட்டப்பட்டது

‘டிட்வா’ அனர்த்தத்தினால் முழுமையாக பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்து இடம்பெயர்ந்த நோர்வூட் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மஸ்கெலியா, சாமிமலை, பெயார்லோன் தோட்டத்தைச் சேர்ந்த நான்கு குடும்பங்களுக்கு புதிய வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்திற்கு இன்று (29) அடிக்கல் நாட்டப்பட்டது.

நோர்வூட் பிராந்திய அபிவிருத்திக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கிருஷ்ணன் கலைச்செல்வி மற்றும் நோர்வூட் பிரதேச செயலாளர் சமீர கம்லத் ஆகியோரின் தலைமையில் இந்த அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பெயார்லோன் தோட்ட நிர்வாகத்தினர் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துரிதமாக நிவாரணங்களை வழங்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த வீடமைப்புத் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

இதன்படி, ஒரு வீட்டை நிர்மாணிப்பதற்காக 50 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நான்கு குடும்பங்களுக்கான வீடுகளை நிர்மாணிப்பதற்காக மொத்தம் 2 கோடி ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles