தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு எதிராக எதிர்வரும் 03 ஆம் திகதி மக்கள் போராட்ட முன்னணி பாரிய போராட்டமொன்றை கொழும்பில் நடத்தவுள்ளதாக முன்னணியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும், முன்னிலை சோஷலிசக் கட்சி முக்கியஸ்தருமான துமிந்த நாகமுவ தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு ,
“ அரசாங்க ஊழியர்கள், தோட்டத் தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்கு சம்பளப் பிரச்சினை உள்ளது. மறுபுறத்தில் வாழ்க்கைச்சுமையும் அதிகரித்துள்ளது. அதேபோல வரிப்பிரச்சினையும் உள்ளது.
இவற்றை முன்னிறுத்தி , மக்களுக்கு தீர்வுகோரி மக்கள் போராட்ட முன்னணி என்ற அடிப்படையில் பாரிய போராட்டமொன்றை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளோம்.
எதிர்வரும் 03 ஆம் திகதி கொழும்பில் பாரிய போராட்டமும், பேரணியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேர்தலை மையப்படுத்தியே சில எதிரணிகள் இயங்குகின்றனர். அக்கட்சிகளுக்கு மக்கள் பிரச்சினை பற்றி அக்கறை இல்லை. எனவேதான் மக்கள் பக்கம் நின்று போராட்டம் நடத்துகின்றோம்.” – என்றார் துமிந்த நாகமுவ.










