விஷ ஊசி செலுத்தியும் பிரியாத உயிர்: பாதியில் நின்ற மரண தண்டனை

மரண தண்டனைக்கான விஷ ஊசியை இருமுறை செலுத்தியும், குற்றவாளியின் உயிர் பிரியாமல் குறட்டை விட்ட சம்பவம் அமெரிக்காவில் பெரும் வியப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் டென்னஸி மாநிலத்தைச் சேர்ந்த கிறிஸ்டா பைக் (Christa Pike – 50) என்பவர், கடந்த 1995-ஆம் ஆண்டு தனது 18-வது வயதில், சக மாணவியான கொலீன் ஸ்லெம்மர் என்பவரைக் கொ#டூ#ர#மான முறையில் ப#டு#கொ#லை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.

நீண்டகாலமாக நடைபெற்ற இந்த வழக்கில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு, அதனை அந்நாட்டு உச்ச நீதிமன்றமும் அண்மையில் உறுதி செய்தது.

நீதிமன்ற உத்தரவையடுத்து, சிறை வளாகத்திலுள்ள தண்டனை அறையில் கிறிஸ்டா பைக்கிற்கு விஷ ஊசி செலுத்தப்பட்டு நடைமுறைகள் தொடங்கின. பொதுவாக, விஷ ஊசி செலுத்தப்பட்ட சில நிமிடங்களிலேயே இதயம் இயங்குவது நின்று மரணம் சம்பவித்துவிடும்.

ஆனால், முதல் முறை ஊசி செலுத்தப்பட்டு 3 நிமிடங்கள் கழித்துத் திரையை விலக்கிப் பார்த்த சிறை அதிகாரிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது! கிறிஸ்டா மரணமடைவதற்குப் பதிலாக, மரண படுக்கையில் குறட்டை விட்டுக்கொண்டிருந்தார்.

உடனடியாக மீண்டும் திரையை மூடிய அதிகாரிகள், அவருக்கு இரண்டாவது முறையாகவும் விஷ ஊசியைச் செலுத்தினர். ஆனால், அடுத்த 40 நிமிடங்கள் கழித்துப் பார்த்தபோதும் அவரது உயிர் பிரியவில்லை; அவர் தொடர்ந்து மூச்சு விட்டுக்கொண்டே இருந்தார்.

விஷ ஊசியே வேலை செய்யாத விசித்திரமான நிலை ஏற்பட்டதால், வேறு வழியின்றித் தண்டனை நிறைவேற்றும் நடைமுறையை அதிகாரிகள் பாதியிலேயே நிறுத்தினார்கள். தொடர்ந்து, தீவிர சிகிச்சைக்காக அவர் அவசர ஊர்தி மூலம் அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

டென்னஸி மாநிலத்தில் கடந்த 200 ஆண்டுகளுக்கும் மேலாக எந்தவொரு பெண்ணுக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய சூழலில், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தண்டனை நிறைவேற்றத்தின் போது நிகழ்ந்த இந்த அரிதான பின்னடைவு குறித்து சிறைத்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Latest Articles