‘ஆகாயப் பேய்’- ஓமான் விமானி குறித்து வெளியான பகீர் தகவல்கள்

துபாயிலிருந்து இஸ்ரேலின் டெல் அவிவ்விற்குப் பறந்த பிளைதுபாய் நிறுவனத்தின் விமானம் ஒன்றில் இந்திய விமானி ஸ்மித் மச்சார் சக விமானியால் கத்தியால் குத்தப்பட்டிருக்கிறார். சக விமானி விமானத்தைத் தகர்க்க முயன்றபோது ஸ்மித் மச்சார் அதைத் தடுக்க முயற்சி செய்திருக்கிறார். அப்போது ஏற்பட்ட தாக்குதல்தான் இது.

இதுவரை யார் அந்தச் சக விமானி என்பது தெரியவில்லை. அவர் ஓமான் நாட்டைச் சேர்ந்தவர் என்பது மட்டுமே இஸ்ரேல் தரப்பில் இருந்து வெளிவந்த ஒரே தகவல். தற்போது அந்தச் சக விமானி யார் என்பது தெரியவந்துள்ளது.

குறிப்பிட்ட பிளைதுபாய் விமானத்தின் முதன்மை விமானி ஸ்மித் மச்சார். இந்தத் தாக்குதலுக்குக் காரணமான உதவி விமானி ஹமாம் அல்ஹமாமி என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

வால்ஸ்ட்ரீட் ஜர்னலின் தகவலின்படி, ஹமாம் அல்ஹமாமியின் தந்தை ஓமான் நாட்டைச் சேர்ந்தவர். தாய் சிரியா நாட்டைச் சேர்ந்தவர். இவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் பிறந்து வளர்ந்த ஓமான் நாட்டைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.

இதுவரை வெளியாகியுள்ள தகவல்களின்படி, அல்ஹமாமி தனது பெரும்பாலான காலத்தைச் சிரியாவில் கழித்துள்ளார். அங்குதான், அவர் தீவிரவாதக் கருத்துகளால் ஈர்க்கப்பட்டுள்ளார் என்று சொல்லப்படுகிறது.

2024-ம் ஆண்டு ‘ஓமன் ஏர்’ என்னும் விமான நிறுவனத்தில் உதவி விமானிப் பயிற்சியாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது அவரிடம் தீவிரவாதம் சம்பந்தமான பொருள்கள் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, அவருக்கு விமானம் இயக்குவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு, அந்த நிறுவனத்திலேயே நிர்வாகம் சார்ந்த பணிகளை மட்டும் செய்து வந்திருக்கிறார்.

ஓமான் ஏர் நிறுவனத்தின் தடையை மீறியும், ஃபிளைதுபாய் நிறுவனத்தில் இவருக்கு உதவி விமானிப் பணி வழங்கப்பட்டிருக்கிறது.

30-ம் திகதி பிளைதுபாய் விமானத்தை இஸ்ரேலுக்குள் மோதிப் பேரழிவை ஏற்படுத்துவதுதான் அல்ஹமாமியின்திட்டமாக
இருந்திருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles