பேராதனையிலிருந்து கொழும்புநோக்கி வந்த ரயில் தடம்புரள்வு

பேராதனையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த கடுகதி ரயில், கடுகமுவ பகுதியில் இன்று அதிகாலை தடம் புரண்டுள்ளது.

ரயில் பாதையில் மண் சரிவு மற்றும் கற்கள் விழுந்திருந்ததாலேயெ இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

டித்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்டுப் புனரமைக்கப்பட்ட பின்னர், பேராதனையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த முதலாவது அலுவலக ரயிலே இவ்வாறு தடம்புரண்டுள்ளது.

இந்த விபத்தினால் ரயிலின் முன்பக்கம் சேதமடைந்துள்ளது.

“ ரயில் பாதையின் குறுக்கே மண் சரிந்து விழுந்திருந்தது. மண் திட்டில் மோதியவுடன் ரயில் தூக்கி வீசப்பட்டது. அவ்வாறு மோதிய வேகத்திலேயே பாறையொன்றில் மோதி சேதம் ஏற்பட்டது” என ரயில் சாரதி கூறியுள்ளார்.

 

 

Related Articles

Latest Articles