வீதியை புனரமைத்துதருமாறு கொத்மலை கெம்னீதன் தோட்ட மக்கள் கோரிக்கை!

நுவரெலியா மாவட்டம், கொத்மலை பிரதேசத்திற்குட்பட்ட கெம்னீதன் தோட்ட மக்கள் பிரதான வீதியை உடனடியாக புனரமைத்து தருமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வெதமுல்ல முதல் கெம்னீதன் வரையான சுமார் 8 கிலோமீற்றர் நீளமான பாதை, கடந்த 2021ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் நுவரெலியா பிரதான வீதியுடன் இணைக்கும் நோக்கில் விஸ்தரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், குறித்த பாதையில் சுமார் 3 கிலோமீற்றர் பகுதி மாத்திரமே புனரமைக்கப்பட்டுள்ளதுடன், மீதமுள்ள சுமார் 5 கிலோமீற்றர் பகுதி புனரமைக்கப்படாமல் கைவிடப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

வெதமுல்ல, லில்லிஷ் லென்ட் மற்றும் கெம்னீதன் ஆகிய மூன்று பகுதிகளைச் சேர்ந்த மக்களின் பிரதான போக்குவரத்து பாதையாக இது காணப்படுகிறது.

பல்வேறு சந்தர்ப்பங்களில் இப்பிரச்சினை தொடர்பில் அறிவித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

மேலும், அண்மைய மழை மற்றும் வெள்ள நிலைமைகளின்போது மற்றுமொரு பிரதான பாதையில் அமைந்திருந்த பாலமும் சேதமடைந்துள்ளதால், கெம்னீதன் பகுதி மக்கள் வெளியிடங்களுக்கு செல்வதிலும் அத்தியாவசிய தேவைகளுக்காக பயணிப்பதிலும் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இப்பகுதியில் சுமார் 130 குடும்பங்களுக்கும் அதிகமான மக்கள் வசித்து வருவதுடன், 574 வாக்காளர்களும் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கர்ப்பிணித் தாய்மார்கள், முதியவர்கள், பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் இந்த இரு பாதைகளையே தங்களது அன்றாடப் பயணங்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

குறிப்பாக மழைக்காலங்களில் இரு பாதைகளும் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுவதால், மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

இத்தகைய பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும், கெம்னீதன் பகுதியைச் சேர்ந்த நான்கு மாணவர்கள் இவ்வருடம் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது என மக்கள் தெரிவிக்கின்றனர்.

“நாங்களும் இந்த நாட்டின் குடிமக்களே. எங்களது அடிப்படை போக்குவரத்து தேவையை கருத்தில் கொண்டு, சேதமடைந்துள்ள இரு பாதைகளையும் விரைவாக புனரமைத்து தருவதற்கு அரசாங்கமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கெம்னீதன் தோட்ட மக்கள் மிகவும் பணிவுடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கௌசல்யா

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles