கழிவறை பயன்படுத்த கட்டுப்பாடு: தலைமுடி விழுந்தாலும் சண்டை: மனைவியால் மன உளைச்சல் – விவகாரத்து கோரிய கணவன்!

மனைவியின் அதீத சுத்தம் காரணமாக அன்றாட வாழ்க்கை பெரும் தகராறுகளாக மாறியதால், நான்கு ஆண்டு கால திருமண வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவரக் கோரி துருக்கி நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர் நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்குத் தொடுத்துள்ளார்.

விவாகரத்து மனுவில், தனது மனைவி வீட்டைச் சுத்தம் செய்த உடனே கழிப்பறையைப் பயன்படுத்த அனுமதிப்பதில்லை என்றும், கட்டிலில் கதனது தலைமுடி விழுந்தால் கூட தீவிர கோபமடைவார் என்றும் தெரிவித்துள்ளார்.

மனைவியின் இந்த அதீத தூய்மைப் பழக்க வழக்கங்களால், வீட்டிற்குள் இயல்பான அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்வது கூட இருவருக்கும் இடையே தொடர் தகராறுகளையே ஏற்படுத்தியுள்ளது.

சமையலறை அழுக்காகிவிடும் என்பதற்காகவே, அவர்கள் வீட்டில் சமைப்பதைத் தவிர்த்து வெளியில் இருந்து உணவுகளை வரவழைத்துச் சாப்பிடும் நிலைக்குத் தள்ளப்பட்டதாகவும் அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தத் தீவிரமான சுத்தத்தால் தான் அனுபவித்த மன உளைச்சல் மற்றும் வீடமைப்புச் சார்ந்த பாதிப்புகளுக்காக, மனைவிமிடமிருந்து 2,50,000 அமெரிக்க டாலர்களை நஷ்டஈடாக வழங்குமாறும் அந்த நபர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Articles

Latest Articles