எனது மக்களை துன்புறுத்தினால் சும்மா இருக்கமாட்டேன்: என்பிபி அரசுக்கு மனோ எச்சரிக்கை!

கொழும்பு, செட்டியார் தெரு விவகாரம் தொடர்பில், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் நாடாளுமன்றத்தில் இன்று ஆற்றிய உரை வருமாறு,

கொழும்பு புறக்கோட்டை செட்டியார் தெருவில்,
கடைகளுக்கு உள்ளே நுழைந்து பொலிஸ்காரர்கள் ஆட்களை அடிக்கிறார்கள். பாடசாலைகளில் மாணவர்களை, ஆசிரியர் அடிக்க கூடாது என்ற சட்டம் இயற்ற பட்ட சூழலில் பொலிஸ் ஆட்களை அடிப்பதா?

செட்டியார் வர்த்தக சமூகத்தவர் ஆர்ப்பாட்டம் செய்தார்கள் என்பதற்காக தேடி, தேடி, கைது செய்து, DCDB ல் வைத்து அடிக்க உங்களுக்கு வெட்கமில்லையா? இது JVP அரசு தானே? நாட்டுக்கே ஆர்ப்பாட்டம் செய்ய கற்று கொடுத்தது நீங்கள் தானே?

ஜனாதிபதி சகோதரர் அனுரவின் அவதானத்திற்கு இந்த விஷயத்தை நான் முன் வைக்கிறேன்.

ஆர்ப்பாட்டம் செய்தவர்களை கைது செய்ய மாட்டோம் என பொலிஸ் அமைச்சர் ஆனந்த விஜேபால எனக்கு உறுதி அளித்தார். பொலிஸ் மாஅதிபர் பிரியந்த விஜேசூரிய உறுதி அளித்தார். புறக்கோட்டை, மாளிகாவத்தை, OICகளை இந்த விடயத்தில் இருந்து அகற்றுவதாகவும் உறுதி கூறினார்.

IGPக்கு கீழே பணி செய்யும் கொழும்பு மத்தி SSP மகேஸ் குமாரசிங்கவும் என்னிடம், பொலிஸ் மா அதிபரின் உறுதியின் படி நடப்பதாக கூறினார். இப்போது புறக்கோட்டை OIC செய்வது என்ன?

ஆர்ப்பாட்டம் செய்தவர்களை வீடியோ காணொளியில் தேடி, தேடி, கைது செய்கிறீர்கள். கைது செய்து தாக்குகிறீர்கள். JVP ஆட்சியில் இப்படி செய்ய உங்களுக்கு வெட்கமில்லையா? அடுத்த முறை இப்படி நடந்தால் நானே நேரடியாக களத்துக்கு வருவேன், என்னுடன் விளையாட வேண்டாம்.

செட்டியார் தெரு வர்த்தகர்கள், நகை தயாரிப்பாளர்கள், சமாதான விரும்பிகள். சட்டத்தை மதிக்கும் நல்ல பிரஜைகள். அரசுக்கு வரி செலுத்துகிறார்கள். கண்ணியமான மனிதர்கள். அவர்கள் திருடர்கள் அல்ல. அவர்களை திருடர் போல் நடத்துவது சரியா? உங்களுக்கு வெட்கம் இல்லையா?

திருட்டு, ஊழல், பாதாளம், போதை, இவற்றுக்கு எதிராக உங்கள் நடவடிக்கைகள் அனைத்தையும் நான் ஆதரிக்கிறேன். இரண்டு கைகளையும் உயர்த்தி ஆதரிக்கிறேன். வேண்டுமானால், இது இங்கே ஆசனத்தில் ஏறி நின்றும் ஆதரவு தெரிவிக்கிறேன்.ஆனால், எனது மக்களை துன்புறுத்தினால் சும்மா இருக்க மாட்டேன். என்னுடன் விளையாட வேண்டாம் என எச்சரிக்கிறேன்.

Related Articles

Latest Articles