அமைதிக்கான நோபல் பரிசு நாளை அறிவிப்பு: வழிமீது விழிவைத்து காத்திருக்கும் ட்ரம்ப்

2026 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு நாளை ( 09) அறிவிக்கப்படவுள்ள நிலையில், உலகளவில் எட்டு போர்களை முடிவுக்குக் கொண்டுவந்த தன்னை விட அதற்குத் தகுதியானவர் எவரும் இல்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு அமெரிக்க ஜனாதிபதிகப் பொறுப்பேற்றது முதல், “பல போர்களை நான் தடுத்து நிறுத்தியுள்ளேன்; எனவே அமைதிக்கான நோபல் பரிசு எனக்கே வழங்கப்பட வேண்டும்” என ட்ரம்ப் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தார்.

இருப்பினும், 2025 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலாவின் எதிர்க்கட்சித் தலைவரான மரியா கொரினா மச்சாடோவுக்கு (María Corina Machado) வழங்கப்பட்டது. இதில் ட்ரம்பிற்குப் பெருத்த அதிருப்தி நிலவிய போதிலும், அமைதிக்கான அவரது முயற்சிகளைப் பாராட்டி மரியா தனது நோபல் பரிசை ட்ரம்பிற்கே சமர்ப்பித்திருந்தார்.

இந்நிலையில், 2026 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படுவதற்குச் சில தினங்களுக்கு முன்னர், வெள்ளை மாளிகையின் ‘ஓவல்’ (Oval Office) அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப் பின்வருமாறு குறிப்பிட்டார்:

“நோபல் பரிசு வரலாற்றிலேயே என்னை விட அதற்குத் தகுதியான நபர் வேறு எவரும் இருந்ததில்லை. நான் எட்டு போர்களை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளேன். இந்த உலகமே ஒட்டுமொத்தமாக அழிந்துபோவதிலிருந்து தடுத்து நிறுத்தியுள்ளேன். அமைதிக்கான நோபல் பரிசு வரலாற்றிலேயே என்னை விட அதற்குத் தகுதியான நபர் வேறு எவருமில்லை என்று மரியா கொரினா மச்சாடோவே என்னிடம் நேரில் கூறியுள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles