லக்சபான வாழமலை பகுதியில் குளவிக்கொட்டு: நால்வர் பாதிப்பு

 

மஸ்கெலியா, நல்லத்தண்ணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லக்சபான தோட்டம், வாழமலைப் பிரிவில் குளவி கொட்டுக்கு இலக்கான நான்கு தோட்ட தொழிலாளர்கள் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச் சம்பவம் இன்று (11) இடம்பெற்றுள்ளது.

லக்சபான தோட்டம், வாழமலைப் பிரிவில் தேயிலைக் கொழுந்து பறிக்கும் பணியை முடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த வேளையிலேயே தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த மீனாம்பாள் (வயது 52), செல்லம்மாள் (வயது 60), யசோதா (வயது 41) மற்றும் திருச்செல்வி (வயது 41) ஆகியோரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலைப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

Related Articles

Latest Articles