எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக இருக்கும் ‘புரட்சித் தலைவர் எம்ஜிஆர்’ படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை த்ரிஷாவை நடிக்க வைப்பதற்குரிய முயற்சிகள் இடம்பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்காக அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக அந்தப் படத்தில் எம்ஜிஆராக நடிக்க இருக்கும் ஜெ.எம்.பஷீர் தகவல் வெளியிட்டுள்ளார்.
ஏற்கனவே பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவான ‘பசும்பொன் தேவர்’ படத்தில் நடித்திருந்த ஜெ.எம்.பஷீர், அடுத்ததாக எம்ஜிஆரின் வாழ்க்கையைப் படமாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்.
இந்த படம் குறித்து பேசிய அவர், எம்ஜிஆர் மீது தனக்கு இருக்கும் பாசம், மரியாதை, படத்தின் நோக்கம், த்ரிஷாவிடம் நடந்து வரும் பேச்சுவார்த்தை எனப் பல விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.
அவர் பேசுகையில், கடந்த ஆண்டு பசும்பொன் முத்துராமலிங்க தேவராக நடித்து அந்தப் படத்தை வெளியிட்டேன். தென் தமிழகத்தில் அந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதற்குப் பிறகு நிறைய படங்களில் நடிக்க என்னை அழைத்தார்கள். ஆனால், நான் அடுத்த கட்டத்துக்கு போக வேண்டும் என்று நினைத்தேன்.
என்னுடைய பிறந்தநாளில் புதிய அறிவிப்புகளை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில்தான் ‘புரட்சித் தலைவர் எம்ஜிஆர்’ படத்தில் நடிக்க முடிவு செய்திருக்கிறேன். இப்போது படத்துக்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.
” உலகம் முழுவதும் பிரபலமானவர் எம்ஜிஆர். அவருடைய வாழ்க்கை வரலாற்றில் நடிப்பதை நான் பெருமையாக நினைக்கிறேன். இந்தப் படம் யாரையும் தாக்கும் விதமாக இருக்காது. எம்ஜிஆரின் புகழைப் பரப்பும் படமாகத்தான் இருக்கும். இந்தப் படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிப்பதற்காகத் த்ரிஷாவிடம் பேசிக் கொண்டிருக்கிறோம்.
அவர் என்னுடைய மகளுக்கு நெருங்கிய தோழி. அதனால் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். த்ரிஷா ஜெயலலிதாவாக நடித்தால் படம் வேற லெவலில் இருக்கும். என்னுடைய மகள் த்ரிஷாவுடன் சேர்ந்து ஒரு படத்திலும் நடித்து வருகிறார்” என்று ஜெ.எம்.பஷீர் கூறியிருக்கிறார்.