“ மனோ கணேசன் பிரதிநிதித்துவப்படுத்தும் சஜித் தலைமையிலான அணி முழுமையாக இனவாதத்தை விதைக்க முற்படுகின்றது.
காவி உடையைக் காட்டி இனவாதத்தை தூண்ட எத்தனிக்கும் இந்த கும்பலுக்கு மனோ கணேசன் போன்ற மலையக தலைவர்கள் துணை நிற்பாரா?
தான் இருப்பது இனவாத அமைப்பு எனில் மனோ கணேசனுக்கு தற்போது புரிந்திருந்தால், அவரின் கூட்டணியை சார்ந்தோர் வெளியிட்ட இனவாதக் கருத்துகளை மீள பெறும்வரை தமது பதவியை மனோ கணேசன் பதவி விலக வேண்டும். அவ்வாறு இல்லையேல் அவர்கள் கூறும் கருத்துக்கு மனோ மன்னிப்பு கோர வேண்டும்.”
இவ்வாறு தேசிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கிட்ணன் செல்வராஜ் சவால் விடுத்துள்ளார்.










