தலவாக்கலை, மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் இன்று (21) திறக்கப்பட்டுள்ளன.
மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீரேந்தும் பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாகவே இவ்வாறு நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாகவும், நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்யுமாயின் நீர்த்தேக்கத்தின் ஏனைய வான் கதவுகளும் திறக்கப்படக்கூடும் என்றும் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திற்குப் பொறுப்பான தலைமைப் பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.
மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, நீர்த்தேக்கத்தின் கீழ்நிலைப் பகுதியிலுள்ள கொத்மலை ஓயாவின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால், கொத்மலை ஓயாவின் இருபுறமும் வசிக்கும் பொதுமக்கள் இது குறித்து அவதானத்துடன் இருக்குமாறு நுவரெலியா மாவட்ட இடர்முகாமைத்துவப் பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.
