ஹட்டன், வெளிஓயா மேற்பிரிவு தேயிலைத் தோட்டத்தில் இன்று (21) பிற்பகல் குளவிக் கொட்டுக்கு இலக்கான 10 பெண் தொழிலாளர்கள் வட்டவளை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த தேயிலைத் தோட்டத்தில் இன்று பிற்பகல் சுமார் 3 மணியளவில் தொழிலாளர்கள் தேயிலைக் கொழுந்து பறித்து கொண்டிருக்கையில், குளவிக் கூடு கலைந்ததையடுத்து அவர்கள் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
இதனையடுத்து, பாதிக்கப்பட்ட 10 பெண் தொழிலாளர்களும் வட்டவளை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக, வைத்தியசாலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
