இலங்கை அணியின் எழுச்சி தொடருமா? பாகிஸ்தானுடன் இன்று மோதல்

பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று செவ்வாய்க்கிழமை லாகூரில் நடைபெறவுள்ளது. இலங்கை நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு போட்டி ஆரம்பமாகும்.

குழப்பங்களும், சீரற்ற ஆட்டத்திறனும் இரு அணிகளின் அடையாளமாகத் திகழும் நிலையில், இம்முறை இரு அணிகளும் ஒரே நேரத்தில் தமது திறமையை நேர்மறையான திசையில் வெளிப்படுத்தியுள்ளன.

இங்கிலாந்துக்கு எதிராக எதிர்பார்ப்புகளைத் தகர்த்து இரு அணிகளும் பெற்ற வெற்றிகளைத் தொடர்ந்து, பல சுவாரஸ்யமான விடயங்களை உள்ளடக்கிய முக்கியமான போட்டியாக இது அமைந்துள்ளது.

இலங்கை அணி தனது கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத வெற்றியைப் பதிவு செய்த லாகூருக்கு மீண்டும் திரும்பியுள்ளது. 1996ஆம் ஆண்டு அந்த மண்ணில் பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியின் உத்வேகத்தை மீண்டும் பெறும் முனைப்புடன், கடந்த வியாழக்கிழமை ராவல்பிண்டியில் வெளிப்படுத்திய அபாரமான துடுப்பாட்ட ஆட்டத்தைத் தொடர்ந்து முன்னேற இலங்கை எதிர்பார்க்கிறது. அன்றைய போட்டியில் இலங்கை அணி தனது கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த துடுப்பாட்ட ஆட்டங்களில் ஒன்றை வெளிப்படுத்தியது.

எனினும், கடந்த காலத்தின் பெருமைகள் நம்பிக்கையளித்தாலும், அண்மைக்காலத் தோல்விகளும் சீரற்ற ஆட்டங்களும் அந்த நம்பிக்கையைச் சிதைக்கும் அபாயம் காணப்படுகின்றது. இதற்கு முன்னரும் இலங்கை அணி இவ்வாறான சூழ்நிலைகளைச் சந்தித்துள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் அவுஸ்திரேலிய அணிக்கு எதிராகப் பெற்ற அபார வெற்றி, இலங்கை அணிக்கு புதிய எழுச்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது நீண்டகால முன்னேற்றமாக அமையவில்லை. 2022ஆம் ஆண்டு ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில், இதே பாகிஸ்தான் அணியை வீழ்த்திப் பெற்ற வெற்றியும், 2023ஆம் ஆண்டு ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டி வரை முன்னேறிய பயணமும் எதிர்பார்த்த தொடர்ச்சியான வளர்ச்சியை வழங்கவில்லை.

இருப்பினும், 400 ஓட்டங்களுக்கு மேற்பட்ட இலக்கை வெற்றிகரமாகத் துரத்திப் பெற்ற வெற்றியை எளிதில் புறக்கணிக்க முடியாது. இலங்கை அணிக்கு புதிய அடித்தளத்தை உருவாக்குவதற்கான பொன்னான வாய்ப்பு தற்போது கிடைத்துள்ளது.

ஆனால், அதற்கு சவாலாக பாகிஸ்தான் அணி களமிறங்கவுள்ளது. அண்மைக்காலமாகத் தோல்வியின் விளிம்பிலிருந்து மீண்டு வந்து வெற்றிகளைப் பதிவு செய்வதில் பாகிஸ்தான் அணி தனித்துவமான திறமையை வெளிப்படுத்தி வருகின்றது.

இலங்கைக்கு எதிரான தொடரின் ஆரம்பப் போட்டியில், வெற்றியை நோக்கி முன்னேறியிருந்த இலங்கை அணியின் வாய்ப்பை இறுதிக்கட்ட பந்துவீச்சின் மூலம் பாகிஸ்தான் தட்டிப்பறித்தது. அதனைத் தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிரான இரு போட்டிகளிலும் தோல்வியின் விளிம்பில் இருந்த பாகிஸ்தான் அணி, வியப்பூட்டும் வகையில் மீண்டெழுந்து வெற்றிகளைப் பதிவு செய்தது.

முதலாவது போட்டியில் அரபாத் மின்ஹாஸ், இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட வரிசையில் எதிர்பாராத சரிவை ஏற்படுத்தினார். அடுத்த போட்டியில் ஷதாப் கான் கீழ்வரிசையில் களமிறங்கி நம்ப முடியாத வகையிலான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles