தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, வரலாற்றுச் சிறப்புமிக்க நுவரெலியா சீதாஎலிய ஆலயத்தில் பொலிஸ் உயர் அதிகாரிகள் தலைமையில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.
நேற்று (06) நடைபெற்ற இந்த விசேட பூஜை வழிபாட்டில், நுவரெலியா பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள், அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் மற்றும் பொலிஸ் உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது, நுவரெலியா உதவிப் பொலிஸ் மா அதிபர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், தலைமையகப் பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட பல உயர் பொலிஸ் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற இந்த விசேட பூஜை வழிபாடுகள் சிறப்பாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
