” நவீன உலகில், முற்போக்கான சிந்தனைப் புரட்சிகள், மக்களின் அறிவார்ந்த தீர்ப்புகள், மற்றும் எதிர்காலத்திற்கு ஏற்ற முன்னேற்றகரமான கொள்கைகள் மற்றும் திட்டங்கள் ஆகியவற்றால் அரசாங்கங்கள் கவிழ்க்கப்படுகின்றன. இருப்பினும், எமது மாற்றுக் கட்சியோ இன்னும் கற்பனையான சிந்தனைகளைக் பற்றிக்கொண்டு, பிற்போக்குத்தனமான சிந்தனையிலிருந்து விடுபட முடியாமல் தவிக்கிறது.
அரசியல் என்பது, களத்தில் இறங்கி மக்களிடம் சென்று செய்வனவற்றையே ஒழிய, இரவில் மயானங்களில் நூல் கட்டுவதாகவோ; பாராளுமன்றத்தில் வசை பாடி செய்வதாகவோ அல்ல.”
இவ்வாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பாதீட்டு உரையில் குறிப்பிட்டார்.
அதேபோன்று, எதையும் கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ளக் கூடாது என்றும், விவேகத்துடன் ஆராய வேண்டும் என்றும் சுட்டிக்காட்டிய புத்தபெருமான், (கேசபுத்த நகரவாசிகளுக்கு) கலாமயர்களுக்கு உபதேசித்த காலாம சூத்திரத்தைப் படித்து, குருட்டு நம்பிக்கைக்கு எதிராக புத்தபெருமான் செய்த புரட்சியைப் புரிந்து கொள்ளுங்கள்.
அசாங்கத்தை விமர்சியுங்கள். எமது கொள்கைகளைக் கேள்விக்குள்ளாக்குங்கள். எங்களுடையதை விடச் சிறந்த மாற்றுத் திட்டத்தை முன்வையுங்கள். அவ்வாறு செய்வதற்கான உங்கள் ஜனநாயக உரிமையை நாம் முழுமையாக அங்கீகரிக்கிறோம்.
ஆனால், வசைபாடல்களுக்குப் பதிலாக மாற்று கொள்கைகளையும், சூனியத்துக்குப் பதிலாக ஆக்கப்பூர்வமான தீர்வுகளையும், யாகக் கிரியைகளுக்குப் பதிலாக அறிவுபூர்வமான விவாதங்களையும் இந்நாட்டின் அரசியலுக்குக் கொண்டு வாருங்கள்.
எமது நாட்டு மக்கள் தொழில்நுட்பத்திலும் அறிவாற்றலிலும் முன்னேறிச் செல்லும்போது, எமது நாட்டின் எதிர்க்கட்சி அரசியல் மாத்திரம் அவற்றைப் புறக்கணித்துப் பின்னோக்கிச் செல்லக் கூடாதல்லவா?
உலகில் நாம் கட்டியெழுப்ப முயற்சிக்கும் நாகரிகமான, அறிவொளிபெற்ற மற்றும் அபிமானம் மிக்க இலங்கையர் என்ற அடையாளத்திற்கு இசைவான ஒரு அரசியல் கலாச்சாரத்தைக் கட்டியெழுப்புவது என்பது அரசாங்கத்திற்கு மட்டுமல்ல, எதிர்க்கட்சியினதும் அடிப்படைப் பொறுப்பாகும் என்பதை இத்தருணத்தில் நான் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.










