இந்தியப் பெருங்கடலில் பண்டா ஆச்சே (Banda Aceh) அருகே இன்று (21) 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை நிலையத்தின் தகவலின்படி, 2026 நவம்பர் 21ஆம் திகதி பிற்பகல் 3.12 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
கடல் மட்டத்திலிருந்து 156 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், தெற்கு அட்சரேகை 8.04° மற்றும் கிழக்கு தீர்க்கரேகை 127.57° ஆகிய புவியியல் அமைவிடத்தில் பதிவாகியுள்ளது.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, இன்று பிற்பகல் 3.30 மணிக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சுனாமி அச்சுறுத்தல் இல்லை (No Tsunami Threat) என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதன் மூலம் இலங்கையைச் சூழவுள்ள கரையோரப் பகுதிகளுக்கு இந்த நிலநடுக்கத்தினால் சுனாமி அபாயம் ஏற்படாது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.










