நல்லத்தண்ணி பகுதியில் கொழுந்து லொறி விபத்து: மூவர் காயம்

 

நல்லதண்ணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மரே தோட்டம், புதுகாடு பிரிவில் லொறியொன்று சுமார் 80 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து இன்று மாலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

தனியார் ஒருவருக்குச் சொந்தமான லொறியை அதன் உரிமையாளர் செலுத்திச் சென்றுள்ளார்.

மரே தோட்டம், புதுகாடு பிரிவில் தேயிலை கொழுந்துகளை ஏற்றிக்கொண்டு தேயிலைத் தொழிற்சாலைக்கு திரும்பிச் சென்றுகொண்டிருந்தபோது, பாரவூர்தி வீதியை விட்டு விலகி சுமார் 80 அடி பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது.

இதன்போது, பாரவூர்தியில் பணியாற்றிய தர்மவர்தன (73), மகேஸ்வரன் (55), மலர்செல்வம் (45) ஆகிய மூவரும் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் முதலில் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நல்லதண்ணி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மேற்கொண்டு வருகின்றார்.

மஸ்கெலியா நிருபர் – செ.தி. பெருமாள்

Related Articles

Latest Articles