துபாய் வீதியில் சேலை அணிந்து சைக்கிள் ஓட்டிய பெண்: 10 கி.மீ. ஓட்டத்திலும் அசத்தல்!

 

துபாயில் நடைபெற்ற இரண்டு முக்கிய உடற்பயிற்சி நிகழ்வுகளில் பாரம்பரிய சேலை அணிந்து பங்கேற்ற இந்தியத் தொழிலதிபர் ஒருவர் சமூக வலைத்தளங்களில் கவனம் ஈர்த்துள்ளார்.

கேரளாவைச் சேர்ந்த காஞ்சனா நாயர் என்பவரே இவ்வாறு தனித்துவமான முறையில் பங்கேற்று இணையத்தில் பாராட்டுகளைப் பெற்று வருகிறார்.

துபாயில் ரியல் எஸ்டேட் நிறுவனமொன்றின் நிர்வாக இயக்குநராகப் பணியாற்றும் இவர், கடந்த நவம்பர் 1ஆம் திகதி நடைபெற்ற ‘Dubai Ride 2026’ நிகழ்வில் சேலை அணிந்து சைக்கிள் ஓட்டினார்.

கேரள மாநில தினத்தைக் கொண்டாடும் வகையில், துபாயின் புகழ்பெற்ற ஷேக் சயீத் வீதியில் பாரம்பரிய கேரள சேலை அணிந்து சைக்கிள் ஓட்டிய அனுபவத்தை அவர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருந்தார்.

அதேபோன்று, கடந்த நவம்பர் 22ஆம் திகதி நடைபெற்ற ‘Dubai Run 2026’ நிகழ்விலும் சேலை மற்றும் பாரம்பரிய ஆபரணங்கள் அணிந்து 10 கிலோமீற்றர் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்றார்.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் 55ஆவது தேசிய தினத்தை முன்னிட்டு, அந்த நாட்டுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்த ஓட்டத்தில் பங்கேற்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா தனது தாய்நாடு என்றாலும், ஐக்கிய அரபு இராச்சியம் தனக்கு இரண்டாவது தாயகம் என்றும், அந்நாடு வழங்கிய வாய்ப்புகள் மற்றும் அனுபவங்களுக்கு நன்றிக்கடன் செலுத்தும் வகையில் இந்த ஓட்டத்தை அர்ப்பணித்ததாகவும் காஞ்சனா நாயர் தெரிவித்துள்ளார்.

அவர் சேலை அணிந்து சைக்கிள் ஓட்டிய மற்றும் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற காணொளிகள் சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றன.

Related Articles

Latest Articles