2029 தேர்தலுக்கு முன்னர் அதிரடி மாற்றம்; மோடி அரசின் புதிய அரசியல் நகர்வு

இந்திய நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவைகளின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன், பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை விரைவுபடுத்தும் புதிய சட்டமூலத்தை மீண்டும் கொண்டுவருவதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கான சட்டமூலத்திற்கு இந்திய மத்திய அமைச்சரவை இன்று (நவம்பர் 27) ஒப்புதல் அளித்துள்ளதாக அரசாங்க வட்டாரங்களை மேற்கோள்காட்டி ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தப் புதிய முன்மொழிவின்படி, 2029ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அடுத்த பொதுத்தேர்தலுக்கு முன்னதாக, மக்களவையின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை தற்போதைய எண்ணிக்கையிலிருந்து சுமார் 50 சதவீதத்தால் அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோன்று மாநில சட்டப்பேரவைகளின் உறுப்பினர்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது.

இந்த மாற்றங்கள் 2051ஆம் ஆண்டு வரை நடைமுறையில் இருக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்திய நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடங்களை ஒதுக்குவதற்கான சட்டம் 2023ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டிருந்தாலும், அடுத்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் பின்னரே அதனை நடைமுறைப்படுத்த முடியும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.

இதனால், 2029ஆம் ஆண்டு பொதுத்தேர்தலுக்கு முன்னதாக பெண்களுக்கான இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் ஏற்படக்கூடும் எனக் கருதப்படுகிறது.

இதனைத் தவிர்க்கும் வகையில், புதிய சட்டமூலத்தின் ஊடாக இடஒதுக்கீட்டை விரைவுபடுத்த அரசாங்கம் முயற்சித்து வருகிறது.

முன்னதாக, இதேபோன்ற சட்டமூலம் கடந்த ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டபோதும், அரசியலமைப்புத் திருத்தத்திற்குத் தேவையான மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற முடியாததால் தோல்வியடைந்தது.

தொகுதிகளை மறுவரையறை செய்வதன் மூலம் ஆளும் அரசாங்கம் தனக்குச் சாதகமான அரசியல் மாற்றங்களை ஏற்படுத்த முயற்சிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியிருந்தன. எனினும், மக்கள் தொகை மாற்றங்களுக்கு ஏற்ப தொகுதிகளை மறுசீரமைப்பது அவசியம் என அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில், எதிர்வரும் திங்கட்கிழமை (நவம்பர் 30) ஆரம்பமாகவுள்ள நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் இந்தச் சட்டமூலம் மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு பிரதமர் நரேந்திர மோடி அரசாங்கத்தின் அரசியல் பலத்தையும் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையையும் சோதிக்கும் முக்கிய நிகழ்வாக அமையுமென அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles