விமலின் செயற்பாடுகள் குறித்து மொட்டு கட்சி அதிருப்தி!

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய விவகாரத்தில் அமைச்சர் விமல்வீரவன்ஸ நடந்துகொண்டவிதம் கவலையளிப்பதாக ஆளுங்கூட்டணியின் தலைமைக்கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இணையவழி ஊடகவியலாளர் மாநாடு கொழும்பில் நடைபெற்றது.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்பது விருப்பு வாக்குக்காக அரசியல் நடத்தும் கட்சி அல்ல. விமல்வீரவன்ஸ அமைச்சரவையில் அங்கம் வகிக்கின்றார். ஆளுங்கட்சியையும் பிரதிநிதித்துவம் செய்கின்றார். எனவே, ஏதாவது பிரச்சினையெனில் அமைச்சரவையில் அல்லது ஆளுங்கட்சி கூட்டத்தில் கருத்து வெளியிட்டிருக்கலாம். அதற்கான கூட்டு பொறுப்பு இருக்கின்றது. அதனைவிடுத்து அவர் செயற்பட்ட விதம் குறித்து கவலையடைகின்றோம்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அழுத்தங்களுக்கு அடிபணியமாட்டார். நாட்டுக்கு எதிரான தீர்மானங்களை எடுக்கமாட்டார். நாட்டுக்கு தேவையானவற்றையே அரசாங்கம் செய்யும். நாட்டை நாம் பாதுகாப்போம்.” – என்றார்.

Related Articles

Latest Articles