73ஆவது தேசிய சுதந்திர தின விழாவை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதற்கமைய வியாழக்கிழமை 4ஆம் திகதி அதிகாலை 4 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை இந்த விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கொழும்பு டொரின்டன் வீதி, சுதந்திர சதுக்கத்தை அண்மித்த பிரதேசங்களில் வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என பொலிசார் அறிவித்துள்ளனர்.
இதற்கமைய குறித்த நேரத்தில், குறித்த பிரதேசத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறும், சாரதிகளுக்கு மாறு வழிகளைப் பயன்படுத்துமாறும் பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோகன வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எனினும், காலி, கண்டி, லோலெவல் ஆகிய வீதிகள் மற்றும் கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை, கோட்டை, புறக்கோட்டை ஆகிய பிரதேசங்களுக்கான போக்குவரத்து வழமைபோல் இடம்பெறுமென பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
தாமரைக் கோபுர சுற்றுவட்டம், தேசிய ஆவணக் காப்பக சுற்றுவட்டம், சுதந்திர சதுக்கம் ஆகிய பிரதேசங்கள் அடங்கிய வீதிகளில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டிருக்கும்.