மீரியபெத்தவில் 134 குடும்பங்களுக்கு நில ஒதுக்கீட்டு ஒப்புதல் கடிதம் வழங்கி வைப்பு

2014 ஆம் ஆண்டு மீரியபெத்த தோட்டத்தில் மண்சரிவால் பாதிக்கப்பட்ட மேலும் 134 குடும்பங்களுக்கு நில ஒதுக்கீட்டு ஒப்புதல் கடிதத்தை இ.தொ.காவின் உப தலைவரும், பிரதமரின் பெருந்தோட்ட இணைப்பாளருமான செந்தில் தொண்டமான்  வழங்கிவைத்தார்.

இந்த குடும்பங்களுக்கு நிலஅளவீடு திணைக்களத்தினால் வழங்கப்பட்ட வரைப்படமும் , NBRO அனுமதியுடன் புதிய காணிகளும் வழங்கிவைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் பேரழிவு அமைச்சின் செயலாளர் மேஜர் சுதந்த ரணசிங்க, பதுளை அரச அதிபர், ஹல்துமுல்ல பிரதேச சபைத் தலைவர் அசோக் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இலங்கையின் 73 வது சுதந்திர தினத்தை மையப்படுத்தி இத்திட்டத்தை செந்தில் தொண்டமான்  ஆரம்பித்து வைத்தார்.

Related Articles

Latest Articles