தீ விபத்தினால் சேதமடைந்த வத்தளை ஶ்ரீசிவசுப்ரமணியம் ஆலயத்தை புனரமைப்புச் செய்ய உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பிரதமரின் பெருந்தோட்ட இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் பணிப்புரை வழங்கியுள்ளார்.
வத்தளை முருகன் ஆலயத்தில் இன்று காலை 10 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டிருந்த நிலையில், மாலை ஐந்து மணிக்கு சேத விபரங்களை செந்தில் தொண்டமான் உள்ளிட்ட குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அ.உமாமகேஸ்வரன், பிரதமர் மகிந்த ராஜபக்சவின் இந்து சமய விவகாரங்களுக்கான இணைப்பாளர் பாபு சர்மா ஆகியோரும் உடன் சென்றிருந்தனர்.
அத்துடன், விபத்து குறித்த அறிக்கையொன்றை பிரதமருக்கு நாளைமறுத்தினம் திங்கட் கிழமை சார்பிக்கவுள்ளனர்.
அத்துடன் ஆலயத்தை புனரமைப்பதற்கான நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்வதற்கான பணிப்புரையையும் செந்தில் தொண்டமான் பணிப்புரை வழங்கினார்.