23 ஆம் திகதி இம்ரான் கான் இலங்கை பாராளுமன்றத்தில் உரை

இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றவுள்ளார் என தெரியவருகின்றது.

எதிர்வரும் 22 ஆம் திகதி கொழும்புவரும் அவர், 23 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் உரையாற்றவுள்ளார்.

பாகிஸ்தானால் விடுக்கப்பட்ட கோரிக்கையின் பிரகாரமே இதற்கான வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.

அதேவேளை, தனது முதலாவது இலங்கை பயணத்தின்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் நாடாளுமன்றத்தில் உரையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles