விமலுக்கு எதிராக மொட்டு கட்சி சரமாரியாக சொற்கணை தொடுப்பு

பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட வேண்டும் என விமல் வீரவன்ச தெரிவித்த கருத்து தொடர்பில் அவர் மன்னிப்பு கோர வேண்டுமென அக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் எம்.பி தெரிவித்துள்ளார்.

கட்சி தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், பொதுஜன பெரமுனதொடர்பாக எவ்விதமான தீர்மானங்களையும் மேற்கொள்ளும் உரிமை விமல் வீரவங்சவிற்கு இல்லை என்பதை அவர் தெரிந்துகொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

எனவே அவருடைய அறிவிப்பு குறித்து பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதுடன் அந்த கருத்தை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் கூறியுள்ளார்.

மேலும் கூட்டணியில் இணைந்துகொண்ட ஒருவர் மிக கீழ்த்தரமான அறிவிப்பொன்றை விடுத்துள்ளமை குறித்து கட்சி என்ற வகையில் கவலையடைவதாகவும் அவர் கூறியுள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனாவின் தலைவர் பதவியில் இருந்து நீக்கி அவருக்கு பதிலாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமிக்கப்பட வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ச அண்மையில் தெரிவித்திருந்தார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles