மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு சட்டபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் சந்தாக்கட்டணமும் அதிகரிக்கப்படவுள்ளது.
இதன்படி தற்போது தோட்டத்தொழிலாளி ஒருவரிடமிருந்து மாதாந்தம் 233 ரூபாவை சந்தாவாக பெறும் தொழிற்சங்கங்கள், இனி மாதாந்தம் 300 ரூபாவை பெறக்கூடிய சூழல் உருவாகியுள்ளது.
அடிப்படை நாட் சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கை தொழிலாளர்கள் மாதாந்த சந்தாவாக செலுத்த வேண்டும். இதன்படி அடிப்படை சம்பளம் அதிகரிக்கும்போது சந்தாவும் அதிகரித்துவிடும்.
கடந்த முறை அடிப்படை சம்பளமாக 700 ரூபா நிர்ணயிக்கப்பட்டபோது தொழிற்சங்கங்கள் 233 ரூபாவை சந்தாவாக பெற்றன, இம்முறை அடிப்படை நாட் சம்பளமாக 900 ரூபா வழங்கப்படும்பட்சத்தில் 300 ரூபாவை சந்தாவாக பெறக்கூடும்.
அதேவேளை , சந்தாக்கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் தொழிற்சங்கங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக எவ்வித அறிவித்தலையும் விடுக்கவில்லை. எனினும், கூட்டு ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டு சம்பள அதிகரிப்பு இடம்பெறும்வேளை, சந்தாக்கட்டணமும் கடந்தகாலங்களில் அதிகரிக்கப்பட்டுள்ளது.










