கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் ஆயிரத்து 18 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்து 429 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் 5 ஆயிரத்து 596 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது.
அதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றிய நிலையில் ஐ.டி.எச். வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த சுகாதார அமைச்சர், பூரணமாக குணமடைந்து இன்று வைத்தியசாலையில் இருந்து வெளியேறினார்.
