சடலத்திலும் அரசியல் நடத்தும் நயவஞ்சக அரசு – வேலுகுமார் சீற்றம்

“முஸ்லிம் மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறையை ராஜபக்ச அரசாங்கம் இன்னும் கைவிடவில்லை.  வலது கையில் கொடுப்பதுபோல நடித்துவிட்டு, அதனை இடதுகையால் பறிக்கும் நயவஞ்சக அரசியலையே முன்னெடுத்துவருகின்றது.” – என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் சுட்டிக்காட்டினார்.

ஜனநாயக மக்கள் முன்னணியின் கண்டி மாவட்ட அலுவலகத்தில் இன்று (03.03.2021) நடைபெற்ற விசேட கலந்துரையாடலொன்றில் பங்கேற்று கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ கொரோனா வைரஸின் கோரத்தாண்டவத்தை எவ்வாறு விரைவில் கட்டுப்படுத்தி, நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டுவரமுடியும் என உலக நாடுகள் கவனம் செலுத்திய நிலையில், கொரோனாவில்கூட அரசியல் நடத்தி, பேரினவாதிகளை திருப்திப்படுத்தும் முயற்சியில் இந்த அரசாங்கம் ஈடுபட்டது.

கொவிட் – 19 தொற்றினால் உயிரிழப்பவர்களை அடக்கம் செய்வதற்கு உலகில் சிறு பரப்பளவுடைய நாடுகள்கூட அனுமதி வழங்கியபோதும், அதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கவில்லை. முஸ்லிம் மக்களின் மத உரிமை மறுக்கப்பட்டதுடன், நம்பிக்கையும் சிதைக்கப்பட்டது. தொழில்நுட்பக்குழு என ஒன்றைக்காரணம்காட்டி தனது குறுகிய அரசியல் நோக்கங்களை ஆளுந்தரப்பு நிறைவேற்றிக்கொண்டது. மக்களின் வலி, வேதனையில்கூட ‘அரசியல் சிற்றின்பம்’ கண்டனர்.

இந்நிலையிலேயே ஜெனிவாத் தொடரும் ஆரம்பமானது. முஸ்லிம் அமைப்புகள் இவ்விடயத்தை சர்வதேசம்வரை கொண்டுசென்றிருந்தன . இதனால் சர்வதேச அழுத்தங்களை சமாளிப்பதற்காகவும், முஸ்லிம் நாடுகளின் ஆதரவை பெறுவதற்காகவும் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய முடியும் என்ற அறிவிப்பை பிரதமர் விடுத்தார். பிரதமரின் இந்த அறிவிப்பைக்கூட மொட்டு கட்சி உறுப்பினர்கள் நிராகரித்து அரசியல் செய்தனர்.

இதற்கிடையில் இம்ரான் கான் வந்துசென்ற பிறகு வர்த்தமானி அறிவித்தல் வெளியானது. அத்துடன் இப்பிரச்சினை தீர்ந்துவிடும் என மக்கள் கருதினர். ஆனால் தமிழ், முஸ்லிம் மக்களுக்கிடையில் வலுப்பெற்ற நல் உறவை சீர்குலைக்கும் வகையில் தற்போது ‘இடத்தேர்வு’ பிரச்சினையை அரசு கிளப்பிவிட்டுள்ளது.

அடக்கம் செய்வதற்கு பல இடங்கள் இருந்தும் அரசியலுக்காக இரணைத்தீவு தெரிவுசெய்யப்பட்டுள்ளது.  தமிழ், முஸ்லிம் மக்களுக்கிடையில் பகைமையை உருவாக்கும் செயலே இது . எனவே, பொருத்தமான இடங்களில் சடலங்களை அனுமதிப்பதற்கு இடமளிக்க வேண்டும். மாறாக ஒரு இடம் என அறிவித்து, இது விடயத்தில் மேலும் இழுத்தடிப்பு செய்யக்கூடாது.” – என்றார் வேலுகுமார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles