அதிமுக சார்பில் நட்சத்திர பேச்சாளர்கள் நாளை முதல் ஏப்ரல் 4 ஆம் திகதிவரை தமிழகம் முழுவதும் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, வாக்கு சேகரிக்க உள்ளனர்.
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதையொட்டி அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன.
நட்சத்திர பேச்சாளர்களும் களம் இறக்கப்பட்டு உள்ளனர். அதன்படி அ.தி.மு.க. சார்பில் அக்கட்சியின் நட்சத்திர பேச்சாளர்கள் நாளை (சனிக்கிழமை) முதல் ஏப்ரல் 4 ஆம் திகதி வரை தமிழகம் முழுவதும் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, வாக்கு சேகரிக்க உள்ளனர்.
அதன்படி அ.தி.மு.க. கலைப்பிரிவு செயலாளரும், பிரபல சினிமா டைரக்டருமான ஆர்.வி.உதயகுமார், நட்சத்திர பேச்சாளர் வி.எம்.சுப்புராஜ், சிறுபான்மையினர் நலப்பிரிவு இணைச்செயலாளர் லியாகத் அலிகான்,
நடிகர்கள் மனோபாலா, ரங்கநாதன், அனுமோகன், பேச்சாளர்கள் பாத்திமாபாபு, நிர்மலா பெரியசாமி, ஆர்.சுந்தர்ராஜன், அஜய்ரத்தினம், வெண்ணிற ஆடை நிர்மலா, கஞ்சா கருப்பு, குண்டு கல்யாணம், நடிகர் வையாபுரி, ரவிமரியா, சிங்கமுத்து, தியாகு, சரவணன், ஜெயதேவி, கவிஞர் முத்துலிங்கம், விஜய் கணேஷ், போண்டா மணி, கலைப்பிரிவு இணைச்செயலாளர் நாஞ்சில் பி.சி.அன்பழகன் ஆகியோர் நாளை முதல் தங்களது பிரசாரத்தை தொடங்குகிறார்கள்.
