மஸ்கெலியா பகுதியிலுள்ள கோவிலொன்று தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. ஆலயத்தின் பூசகர் உட்பட் நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதையடுத்தே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.க்கப்படுகின்றது.
குறித்த ஆலயத்தில் சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட ஒருவர் உயிரிழந்துள்ளார். அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது.
இதனையடுத்து நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில், ஆலயத்தின் பூசகர் மற்றும் பிரதேசத்திலுள்ள சிலருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
கொரோனா தொற்றாளர்கள் சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
