ஐக்கிய மக்கள் சக்தியே வெற்றிபெறும் – அரவிந்தகுமார்

தற்போதைய அரசாங்கம் இனவாத ஆட்சியையே முன்னெடுக்கின்றது. தமிழ், முஸ்லிம் வாக்குகள் தேவையில்லை என கூறுகின்றது. அப்படியானால் எதற்காக அவர்களுக்கு வாக்களிக்கவேண்டும் – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட வேட்பாளர் அ. அரவிந்தகுமார் கேள்வி எழுப்பினார்.

பதுறையில் நடைபெற்ற பிரச்சாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இந்த கேள்வியை எழுப்பினார்.

எமது மக்கள் மிகுந்த அமைதியாக இருந்து வருகின்றனர். இவ்வகையில் அமைதியாக இருந்து, அடுத்த மாதம் 5ஆம் திகதி ஐக்கிய மக்கள் சக்திக்கு தொலைபேசி சின்னத்திற்கு வாக்களித்து, எமக்கும் விருப்பு வாக்குகளை வழங்கி வெற்றிபெற வைப்பார்கள்.

தற்போதைய காபந்து அரசு இனவாதத்தை வெளிப்படையாகவே மேற்கொண்டு வருகின்றது. தமிழ் முஸ்லிம் மக்களினது வாக்குகள் எமக்குத் தேவையில்லையென்று ஆட்சியாளர்கள் வெளிப்படையாகவே கூறி வருகின்றனர்.

ஆனால், மாவட்ட ரீதியில் போட்டியிடும் ஆட்சியாளர்களின் கட்சி வேட்பாளர்கள் தமிழ், முஸ்லிம் வாக்குகளைப்பெற பாரியமுயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆகவே, எமது மக்கள் சிந்தித்துச் செயல்படல் வேண்டும்.

கடந்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு எதிராக 69 இலட்சம் பேர் வாக்களித்தனர். அதே 69 இலட்சம் பேரும் ஐக்கிய மக்கள் சக்திக்கே இம்முறை வாக்களிப்பர் என்றும் குறிப்பிட்டார்.

பதுளை நிருபர் – செல்வராஜா

Related Articles

Latest Articles