செந்தில் தொண்டமானின் வெற்றியுடன் பதுளை மாவட்டத்தில் மொட்டு அணிக்கு அமோக வெற்றி கிடைக்கும் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வேட்பாளர்களின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் கட்சித் தலைவர், பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையில் இன்று பதுளையில் பிரசாரக் கூட்டம் ஒன்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர், செந்தில் தொண்டமானின் வெற்றியுடன் பதுளையில் அரசாங்கம் அமோக வெற்றிபெறும் என்று தெரிவித்தார்.
அத்துடன், பதுளை மாவட்டத்தில் ஆளும் கட்சிக்கு 7 ஆசனங்கள் கிடைப்பது உறுதி என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, ஆளும் கட்சியில் செந்தில் தொண்டமான் இருக்கும் போது எதிர்தரப்பில் இருந்து எந்தவொரு நபரையும் ஆளும் கட்சி உள்வாங்காது எனவும் இந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஆளும் கட்சி பதுளையில் 7 ஆசனங்களைப் பெறுவது உறுதியாகியுள்ள நிலையில், எதிர் தரப்பினருக்கு ஆளும் கட்சியின் கதவு அடைத்தே இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
செந்தில் தொண்டமானுக்கு அடுத்த அரசாங்கத்தில் பலம்மிக்க அமைச்சுப் பதவியொன்று வழங்கப்படும் என்று அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பகிரங்கமாக அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.