நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது

இந்திய திரைத்துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுவதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினியின் 40 ஆண்டு கால திரையுலக சாதனையை பாராட்டி, அவருக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

51வது தாதா சாகேப் பால்கே விருது இன்று அறிவிக்கப்பட்டது. இந்திய சினிமாவில் சிறந்த பங்களிப்பை தந்தற்காக இந்த விருது அளிக்கப்படுவதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

இந்திய திரைப்படத் துறையில் சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருது இதுவாகும். தங்கத் தாமரை பதக்கமும், பணப்பரிவும் வழங்கப்படும்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்,

“தமிழக தேர்தலுக்கும் ரஜினிகாந்துக்கு விருது அறிவித்ததற்கும் எந்த தொடர்பும் இல்லை” என்று அவர் தெரிவித்தார்.

முன்னதாக நடிகர் திலகம் சிவாஜி, இயக்குநர் கே.பாலசந்தர் ஆகியோருக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles