சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியே பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது.
” ஐக்கிய தேசியக்கட்சி இரண்டாக பிளவுபட்ட பின்னர், எந்த தரப்புக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பில் மக்களிடம் நாம் கருத்து கேட்டோம். அப்போது சஜித் பிரேமதாசவை ஆதரிக்குமாறு அவர்கள் குறிப்பிட்டனர். இதற்கமையவே நாம் முடிவெடுத்தோம்.
பொதுத்தேர்தலில் நிச்சயம் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.
நாம் எம்மால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்களை எடுத்துரைத்து வாக்கு கேட்கின்றோம். ஆனால், எம்மை விமர்சித்துதான் எதிர்தரப்பு வாக்கு கேட்கின்றது.
தற்போதைய சூழ்நிலையில் தோட்டத் தொழிலாளர்களுக்கு 2 ஆயிரம் ரூபா வழங்கப்பட்டாலும் அது போதுமானதாக இருக்காது. ஆனால், இந்த தொகையை கம்பனிகள் வழங்காது. எனவேதான் தோட்டங்களை எமது மக்களுக்கு பிரித்து வழங்குமாறு கேட்டுவருகின்றோம்.” – என்றார்.