நாட்டில் மேலும் 8 கிராம சேவகர் பிரிவுகள் ‘லொக்டவுன்’

கொழும்பு உட்பட 5 மாவட்டங்களில் மேலும் 8 கிராம சேவகர் பிரிவுகள் இன்று காலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கொழும்பு மாவட்டத்தில் பாதுக்க பொலிஸ் பிரிவிலுள்ள உக்கல்ல கிராம சேவகர் பிரிவும், கம்பஹ மாவட்டத்துக்குட்பட்ட வத்தளை பொலிஸ் பிரிவிலுள்ள அஸ்விஸ் வத்த கிராம சேவகர் பிரிவு, களுத்துறை மாவட்டத்தில் பானதுறை தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாரம்பிட்டிய, பின்வத்த ஆகிய கிராம சேவகர் பிரிவுகளும் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் திஸ்ஸ வீரசிங்கம் சதுக்கம் கிராம சேவகர் பிரிவும்,நுவரெலியா மாவட்டத்தில், ஹங்குராங்கெத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரத்மெட்டிய கிராம சேவகர் பிரிவும் இன்று காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

Related Articles

Latest Articles