“மாண்டவர்கள் மீதான நிந்தனை ” – மானங்கெட்ட அரசியல் பிழைப்பு! மனோ சீற்றம்

தெற்கில் கிளர்ச்சிகளின் போது கொல்லப்பட்ட சிங்கள மக்களின் நினைவாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள தூபிகளை போன்று, போரில் மாண்ட தமிழ் மக்களின் நினைவாக நிர்மாணிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூபி, இலங்கை இராணுவ சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது நொறுக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டவட்டமான மானங்கெட்ட செய்கையை நாம் கண்டிக்கின்றோம். அத்துடன், மாண்டவர்களை நிந்திக்கும் இந்த அநாகரீக செயலை கண்டிக்கும்படி சிங்கள முற்போக்கு சக்திகளையும், பெளத்த சமூக தலைவர்களையும் நாம் அழைக்கின்றோம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி கூறியுள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவு தூபி இடிக்கப்பட்டமை தொடர்பில் தனது உத்தியோகப்பூர்வ டுவீட்டர் தளத்தில் பதிவிட்டுள்ள மனோ எம்பி, இதுபற்றி மேலும் கூறியுள்ளதாவது,

“கொரோனா நோய் ஒழிப்பில் தோல்வி”, “துறைமுக நகர் சீனாவுக்கு தாரைவார்ப்பு” ஆகிய நாட்டின் உண்மையான தேசிய பிரச்சினைகளை சிங்கள மக்களின் கவனத்துக்கு வராமல் தடுக்க, அவ்வப்போது தமிழ், முஸ்லிம் மக்களின் மீது இனவாதம் காட்டி தேசிய கவனத்தை வேறு பக்கம் கொண்டு போகும் அரசின் நீண்டநாள் தந்திர அரசியல் ஒரு “மானங்கெட்ட அரசியல் பிழைப்பு” என்பதை, அரசின் உள்ளே இருக்கும் தமிழ், முஸ்லிம் அமைச்சர்கள், எம்பீக்கள் ஜனாதிபதி கோதாபய ராஜபக்சவுக்கு எடுத்து கூற வேண்டும்.

இந்த திட்டவட்டமான மானங்கெட்ட செய்கையை நாம் கண்டிக்கின்றோம். அத்துடன், மாண்டவர்களை நிந்திக்கும் இந்த அநாகரீக செயலை கண்டிக்கும்படி சிங்கள முற்போக்கு சக்திகளையும், பெளத்த சமூக தலைவர்களையும் நாம் அழைக்கின்றோம்.

தெற்கில் 1971, 1989 கிளர்ச்சிகளின் போது கொல்லப்பட்ட சிங்கள மக்களின் நினைவாக தூபிகள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. அதேபோன்று, போரில் மாண்ட தமிழ் மக்களின் நினைவாக முள்ளிவாய்க்கால் நினைவு தூபி நிர்மாணிக்கப்படுகிறது. இது இன்று இலங்கை இராணுவ சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது நொறுக்கப்படுகிறது.

ஆகவே, மாண்டவர்களை நிந்திக்கும் இத்தகைய அநாகரீக செயல்களை கண்டிக்காமல், சிங்கள முற்போக்கு சக்திகளும், பெளத்த சமூக தலைவர்களும் தொடர்ந்தும் மௌனமாக இருக்க முடியாது.

அதேபோல் மாண்டுப்போன தமிழ் மக்களை நேரடியாக குறி வைத்து அவமானப்படுத்தும் இந்நடவடிக்கையை, தமிழ், முஸ்லிம் உறவை விரும்பும் அனைத்து தமிழ் பேசும் முஸ்லிம் அரசியல் தலைவர்களும், கட்சிகளும் கண்டிக்க வேண்டும்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles