நோர்வூட் ஆடைத்தொழில்சாலை ஊழியர்களுள் மேலும் 18 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இன்று (15) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மஸ்கெலியா சுகாதார மருத்துவ அதிகாரி ஆர்.சந்திரராஜன் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
மஸ்கெலியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலுள்ள நோர்வூட் ஆடைத் தொழிற்சாலையில் இன்று நடத்தப்பட்ட ‘ரெபிட் அன்டிஜன்’ பரிசோதனையிலேயே 18 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் மேற்படி ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ரெபிட் அன்டிஜன் பரிசோதனையில் 22 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
கொவிட் – 19 தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட ஊழியர்கள் பொகவந்தலாவ, மஸ்கெலியா, குடா மஸ்கெலியா, டிக்கோயா, நோர்வூட் உட்பட மேலும் சில பகுதிகளில் இருந்து தொழிலுக்கு வருபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கே. சுந்தரலிங்கம், ஹட்டன்
