21/4 தாக்குதல் – இஸ்ரேல் புலனாய்வு பிரிவு குறித்து விசாரணை கோருகிறார் ஹக்கீம்

21/4 தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் இஸ்ரேலின் புலனாய்வுப்பிரிவும் இருந்துள்ளது. இது தொடர்பிலும் விசாரணை நடத்தப்பட வேண்டும் – என்று ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் கோரிக்கை விடுத்தார்.

நாடாளுமன்றம் நேற்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. இதன்போது 21/4 தாக்குதல் சம்பவத்தை அடிப்படையாக வைத்து சபையில் நேற்று முன்தினம் எழுப்பட்டிருந்த கேள்விகளுக்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர நேற்று பதிலளித்தார்.

அதன்பின்னர் கருத்து வெளியிடுகையிலேயே ஹக்கீம் இந்த கோரிக்கையை விடுத்தார். இது தொடர்பில் அவர் கூறியதாவது,

“ 21/4 தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி குறித்து எனது உரையின்போது இதற்கு முன்னரும் சில கருத்துகளை வெளியிட்டுள்ளேன். இஸ்ரேலின் புலனாய்வு பிரிவு இதன்பின்னணியில் இருந்துள்ளது என்பதற்கான தகவல்கள் உள்ளன. ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையிலும் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இது பற்றியும் ஆராயப்பட வேண்டும்.

அதேவேளை, இளம் முஸ்லிம் கவிஞர் ஒருவரும் கைது செய்யப்பட்டு ஒரு வருடகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் சர்வதேச அமைப்புகளும் கேள்வி எழுப்பியுள்ளன. அரசின் இவ்வாறான அணுகுமுறையால் நம்பகத்தன்மை ஏற்படுகின்றது.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles