நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த ஐவர் உட்பட கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 46 பேர் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பான தகவல்களை சுகாதார பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரச தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
இதன்படி நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 178 ஆக அதிகரித்துள்ளது.





		









