ஹப்புத்தளையில் கற்பாறைகள் சரிவு!

பதுளை, ஹப்புத்தளை கல்கந்த கிராம சேவையாளர் பிரிவிலுள்ள சில மலைப்பாங்கான இடங்களில் கற்பாறைகள் சரிந்துள்ளன.

அத்துடன், மண்மேடுகளும் சரிந்து விழக்கூடிய அபாயம் இருப்பதாக பிரதேச மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனையடுத்து நிலைமை தொடர்பில் ஆராய்வதற்காக ஹப்புத்தளை பிரதேச சபையின் தவிசாளர் கந்தசாமி கண்ணா, ஹப்புத்தளை பிரதேச செயலாளர் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் இன்று சம்பவ இடங்களுக்குச்சென்றனர்.

கற்பாறைகள் சரிந்து விழுந்துள்ள பகுதிகளை ஆராய்ந்தனர். கற்பாறைகள் சரிந்துள்ளதால் எவருக்கும் பாதிப்பு இல்லை. அப்பகுதியில் சுமார் 60 பேர் வரை வசிப்பதால் அவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை, ஹப்புத்தளை – கொழும்பு பிரதான வீதியில் பயணிப்போர் அவதானதத்துடன் செயற்படுமாறு அப்புத்தளை பிரதேச செயலாளர் கேட்டுள்ளார்.

பதுளை மாவட்டத்தில் இன்று காலை முதல் மழை பெய்துவருகின்றது.

க.கிசாந்தன்

Related Articles

Latest Articles