படகில் கொண்டுவரப்பட்ட 200 கிலோ ஹெரோயின் பறிமுதல்

மிரிஸ்ஸ வெலிகம பிரதேசத்தில் இன்று அதிகாலை 200 கிலோகிராம் ஹெரோயின் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதன்போது ஒன்பது சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்படையினரும், போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவினரும், கரையோர பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகளும் நடத்திய சோதனையின்போது இந்த பாரிய ஹெரோயின் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தேசிய புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலுக்கமைய சோதனை நடத்தப்பட்டுள்ளது.

எரிவாயு சிலிண்டர்களிலும், சணல் பைகளிலும் பொதுசெய்யப்பட்டு இந்த ஹெரோயின் போதைப் பொருட்கள் சிறிய படகொன்றில் கொண்டுவரப்பட்டுள்ளது.

மே மாதம் 11ஆம் திகதி மீன்பிடிக்கச் சென்ற இழுவைப் படகில் இருந்து இந்த ஹெரோயின் போதைப் பொருட்கள் சிறிய படகிற்கு மாற்றப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

 

Related Articles

Latest Articles