‘பால்மாக்களின் விலையை 350 ரூபாவால் அதிகரிக்குமாறு கோரிக்கை’

இறக்குமதி செய்யப்படும் பால்மாக்களின் விலையை அதிகரிப்பதற்கு அனுமதி வழங்குமாறு பால்மாக்களை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள், நுகர்வோர் அதிகார சபையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளன.

உலக சந்தைகளில் பால்மாக்களின் விலை மற்றும் கப்பல் கட்டணம் அதிகரித்துள்ளதாலேயே இவ்வாறானதொரு கோரிக்கையை விடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மேற்படி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இதன்படி 400 கிராம பால்மாவின் விலையை 140 ரூபாவாலும், ஒரு கிலோ பால்மாவின் விலையை 350 ரூபாவாலும் அதிகரிப்பதற்கு அனுமதி கோரப்பட்டுள்ளது.

எனினும், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் விலை அதிகரிப்புக்கு இடமளிக்கப்படமாட்டாது என நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

Related Articles

Latest Articles