பாராளுமன்றம் வருகிறார் பஸில்! நிதி அமைச்சு பதவியும் ஒப்படைப்பு!!

அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பிய பின்னர், நாடாளுமன்ற உறுப்பினராக பஸில் ராஜபக்ச சத்தியப்பிரமாணம் செய்வாரென ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன என்று பிரபல சிங்கள இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றதும் பஸில் ராஜபக்சவுக்கு நிதி அமைச்சு பதவி வழங்கப்படவுள்ளது எனவும், அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன எனவும் மேற்படி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பஸில் ராஜபக்ச நாடாளுமன்றம் வருவதற்காக பதவி துறக்கவுள்ள நாடாளுமன்ற உறுப்பினருடன் இவ்விவகாரம் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச கலந்துரையாடியுள்ளார் எனவும் குறித்த இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்கா சென்றுள்ள பஸில் ராஜபக்ச எதிர்வரும் 23 ஆம் திகதி நாடு திரும்பவுள்ளார்.

Related Articles

Latest Articles