பெருந்தோட்டப்பகுதிகளில் வசிக்கும் முதியவர்கள், தடுப்பூசி ஏற்றும் நிலையத்துக்கு செல்வதற்கான போக்குவரத்து ஏற்பாடுகளை தோட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் – என்று இ.தொ.காவின் உப தலைவரும், பிரதமரின் இணைப்புச்செயலாளருமான செந்தில் தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார்.
எல்ல பகுதியைச் சேர்ந்த தோட்ட முகாமையாளர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
இக் கலந்துரையாடலின் போது தங்கள் தோட்டங்களில் வசிக்கும் முதியவர்களை கோவிட் தடுப்பூசி மையத்திற்கு அழைத்து செல்ல தேவையான போக்குவரத்து வசதிகளை ஏற்பாடு செய்து கொடுக்குமாறும், பெருந்தொட்ட மக்களுக்காக ஒதுக்கப்பட்ட தடுப்பூசி திட்டத்தை முழுமையாக அம்மக்கள் பயன்படுத்த வேண்டும் எனவும் செந்தில் தொண்டமான் வலியுறுத்தினார்.


