கொரோனாவால் லிந்துலையில் ஒருவர் உயிரிழப்பு!

லிந்துலை பொது சுகாதார பரிசோதகர் பிரிவுக்குட்பட்ட லிந்துலை பேராம் பகுதியில் covid-19 மரணம் ஒன்று பதிவாகியுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த தோட்டத்தில் வசித்த 62 வயதுடைய ஒருவர் சுகயீனம் காரணமாக 16ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு 17ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

பின்னர் அவருக்கு மேற்கொண்ட பி சி ஆர் பரிசோதனைகளில் பிரியர்களுக்கு அமைய அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

அதைப்போல் கொட்டகலை பொது சுகாதார பரிசோதகர் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை கட்டுக்களை தோட்டத்தில் 5 பேருக்கு covid-19 தோற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களை நுவரெலியா தனிமைப்படுத்தும் நிலையத்திற்கு நேற்று  கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பிரதேசத்திற்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles