ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் விசேட கூட்டமொன்று அடுத்த வாரமளவில் நடைபெறவுள்ளது எனவும், அதற்கான ஏற்பாடுகள் தற்போது செய்யப்பட்டுவருகின்றன எனவும் கட்சி வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
அமெரிக்கா சென்ற மொட்டு கட்சியின் ஸ்தாபகர் பஸில் ராஜபக்ச, ஜுன் 23 ஆம் திகதி நாடு திரும்புவார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. அவர் கொழும்பு வந்த பின்பே இக்கூட்டமும் நடைபெறவுள்ளது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கியமான நாடாளுமன்ற உறுப்பினர்களும், தொகுதி அமைப்பாளர்களும் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.
கட்சியின் எதிர்கால அரசியல் நகர்வுகள், பங்காளிக்கட்சிகளால் பிரயோகிக்கப்படும் அரசியல் அழுத்தங்கள் உட்பட சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் இதன்போது விரிவாக அலசி ஆராயப்படவுள்ளது.
இச்சந்திப்பின் பின்னர் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருடன் பஸில் கலந்துரையாடுவார் என தெரியவருகின்றது.
