ஆளுங்கட்சி உறுப்பினரான இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் வீட்டுக்கு முன்பாக இன்று மாலை துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். காயமடைந்தவர் உயிரிழந்துவிட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
மட்டக்களப்பு பிள்ளையாரடி பகுதியில், மென்டர்சன் வீதியிலேயே இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீடு உள்ளது. அவ்வீட்டுக்கு முன்பாகவே இன்று (21) மாலை 6 மணியளவில் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இராஜாங்க அமைச்சரின் வீட்டுக்குள் இளைஞர் ஒருவர் அத்துமீறி நுழைய முற்பட்ட வேளையிலேயே அங்கு பாதுகாப்பு கடமையிலிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர், துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார் எனவும், இதனால் காயமடைந்த இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளார் எனவும் தெரியவருகின்றது.
